தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம் மூலம் கரோனா சிகிச்சை! - செயற்கை சுவாசம்மூலம் சிகிச்சை

கவுஹாத்தி: கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய்-க்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

covid-19-hospitalised-tarun-gogois-oxygen-saturation-dips-given-plasma-therapy
covid-19-hospitalised-tarun-gogois-oxygen-saturation-dips-given-plasma-therapy

By

Published : Sep 1, 2020, 1:37 PM IST

Updated : Sep 1, 2020, 2:06 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய டைட்டாபோர் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான தருண் கோகாய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவர், கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஜி.எம்.சி.எச்) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) இரவு 11.30 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

மேலும், மருத்துவர்கள் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கவுள்ளதாக அஸ்ஸாம் சுகாதாரத்துறை அதியமைச்சர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 1, 2020, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details