திரிபுராவில் 138ஆவது பட்டாலியனைச் சேர்ந்த பி.எஸ்.எஃப் வீரருக்கு கரோனா பாதிப்பு இருப்பது முதலில் உறுதி செய்யப்பட்டது. தற்போது மற்றொரு பட்டாலியனிலும் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் திரிபுராவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து திரிபுரா முதலமைச்சர் பதவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”அகர்தாலவிற்கு வடக்கே 82 கி.மீ தொலைவில் உள்ள 86ஆவது பட்டாலியனில் 24 பேருக்கு புதிதாக கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது” என அதில் கூறியுள்ளார்.