கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த மூன்று மாத காலமாக பல்வேறு பணிகள் இதனால் முடங்கியுள்ளன. பொதுமக்கள் அரசு ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலாவதியாகும் மோட்டர் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகன உரிமம், உடல் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட மோட்டர் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு - வாகன உரிமம்
டெல்லி: வாகன உரிமம், உடல் தகுதி சான்றிதழ் போன்றவற்றை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாகன உரிமம்
முன்னதாக மார்ச் மாதம், பெருந்தொற்று காரணமாக ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "இம்மாதிரியான சூழலில் அவதிக்குள்ளாகும் மக்களை கருத்தில் கொண்டு மோட்டர் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: வீடு திரும்பிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்