தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19: வாகன ஆவணங்கள் காலாவதியாகும் காலம் நீட்டிப்பு! - மோட்டார் வாகனச் சட்டம் 1988

டெல்லி: பிப்.1ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை காலாவதியாகும் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் வகையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

covid-19-govt-extends-validity-of-motor-vehicle-act-related-documents-till-jun-30
covid-19-govt-extends-validity-of-motor-vehicle-act-related-documents-till-jun-30

By

Published : May 7, 2020, 7:54 AM IST

கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர். மே 3ஆம் தேதிக்குப் பிறகு சில பகுதிகளுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அளித்திருந்தாலும், பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989 , மோட்டார் வாகனச் சட்டம் 1988 ஆகியவற்றின் கீழ் வரும் வாகன ஆவணங்கள் பிப்.1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் காலாவதியானால், அந்த ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கரோனா ஊரடங்கினால் வாகன உரிமையாளர்கள் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாது என்பதால், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:பல ஆண்டுகளாக அக்கறையில்லாமல் இருக்கும் அரசு... சொந்த செலவில் சாலை அமைத்த கிராமம்...!

ABOUT THE AUTHOR

...view details