தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா மருந்து: பரிசோதனையில் பலன்தரும் ஃபாவிபிராவிர் மருந்து - கோவிட் 19 பாதிப்பு இந்தியா

டெல்லி: கிளினிக்கல் பரிசோதனையின் மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்துள்ள ஃபாவிபிராவிர் மருந்து, நம்பிக்கை தரும் பலன்களைத் தருவதாக கிலென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Drug
Drug

By

Published : Jul 23, 2020, 12:17 PM IST

கரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் தற்போது 12 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இத்தொற்றுக்கு இதுவரை முறையான மருந்து கண்டறியப்படவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தன்மைக்கேற்ப பரிட்சார்த்த முயற்சியில் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலென்மார்க், ஃபாவிபிராவிர் என்ற மருந்தின் சோதனை குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மருந்து தற்போது மூன்றாவது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. சுமார் 150 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், ஒவ்வொரு கட்டமும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு அறிக்கைத் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மருந்து உட்கொண்டவர்களில் 69.8 விழுக்காட்டினர் நான்காவது நாளே குணமடைந்ததாகவும், ஆக்ஸிஜன் குறைவாகச் சுவாசப் பிரச்னையில் தவித்துவந்தவர்கள், மருந்து உட்கொண்டு ஓரிரு நாள்களில் உடல்நிலை தேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பரிசோதனையின் முழு விவரத்தையும் மருத்துவ இதழில் முறையாக வெளியிடவுள்ளதாகவும் கிலென்மார்க் நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் வங்கி ஊழியர்களுக்கு நிம்மதியை அளிக்கும் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details