நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, பிரதமர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, பலதரப்பட்ட மக்கள் தங்களால் முடிந்தவரை நிதி உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில், பிகார் மாநிலத்தில் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிஹாரி பஜாரை சேர்ந்தவர் தீபக் சர்மா. இவரின் மகள் பாலாக், நான்காம் வகுப்பு பயின்றுவருகிறார். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் இயலாத மக்களுக்கு உதவி செய்யும் பாலாக், இந்தாண்டு பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவது குறித்து தனது தந்தையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
உண்டியல் சேமிப்பை வழங்கிய பள்ளி சிறுமி இதையடுத்து, பாலாக் தனது குடும்பத்தினருடன் மணிஹாரி காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணமாக ரூபாய் 409ஐ ஆய்வாளரிடம் அளித்துள்ளார். இதையடுத்து, எஸ்பிஐ வங்கி மேலாளரை அழைத்த ஆய்வாளர், பாலாக் முன்பே பிரதமரின் நிவாராண நிதிக்கானப் பணத்தை அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி கூறுகையில், " நான் பணம் சேர்க்க முடிவு செய்த போதே, நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். அதே போல், பணத்தை அளித்துவிட்டேன் என மகிழ்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து வங்கி மேலாளர் கூறுகையில், " பாலாக்கின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இவரைப் போலவே பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி வழங்க விரும்புவோர் நேரடியாக வங்கியைத் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:கரோனா, காலத்தின் சோதனைக் கட்டம்!