கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது 185 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பேஸ்புக்கின் அதிரடித் திட்டம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
கேமிங் பிரியர்களுக்கு பேஸ்புக்கின் அதிரடித் திட்டம் இந்தக் காலக்கட்டத்தில் அதிக பேர் ஸ்மார்ட்போன்களிலும் கணினிகளிலும் கேம்களை விளையாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பேஸ்புக் கேமிங் தொடர்கள் குறித்து பல்வேறு தகவல்களை பேஸ்புக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடர்களில் யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பங்கேற்கலாம் என்றும் பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்காத நபரும் இந்த கேமிங் தொடர்களில் பங்கேற்கலாம். ஆனால், பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர் அவரை முன்மொழிய வேண்டும்.
fb.gg/tournamentsஎன்ற தளத்திற்குச் சென்று யார் வேண்டுமானாலும் ஒரு கேமிங் தொடரை உருவாக்கலாம். அல்லது ஏற்கனவே ஒருவர் உருவாக்கிய தொடரில் இணையலாம். இந்த கேமிங் தொடரில் தனியாகவோ அல்லது அணிகளாகவோ கேமிங் ரசிகர்கள் பங்கேற்கலாம்.
வாடிக்கையாளார்கள் இதை பேஸ்புக் டெஸ்க்டாப், பேஸ்புக் ஐ.ஓ.எஸ்., பேஸ்புக் ஆண்டிராய்டு செயலி என அனைத்தில் இருந்தும் பயன்படுத்த முடியும் என்றும் பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் மூலமாக பரவும் கரோனா வைரஸ்!