தொழிலாளர் சட்டங்களை திருத்தும் மாநிலங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களைச் சுரண்டி, அவர்களின் குரலை அடக்குவதற்கும், அவர்களின் மனித உரிமைகளை நசுக்குவதற்கும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பல மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தியுள்ளன. பாதுகாப்பற்ற பணியிடங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகளில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை முன்வைத்துள்ள காங்கிரஸின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், “பல மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களை திருத்துகின்றன. நாம் கரோனா தொற்றுக்கு எதிராக ஒன்றாகப் போராடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு என்ற பெயரில் தொழிலாளர், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை தளர்த்துவது ஆபத்தானது. இது பேரழிவை ஏற்படுத்தும். இதை மோடி அரசு திட்டமிட்டுச் செய்கிறது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. இது பணமதிப்பிழப்பை போன்ற ஒரு மோசமான திட்டமாகும்” என ட்வீட் மூலம் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு: லிபரான் அறிக்கையில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்கள்!