தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையில் டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே அனுமதி! - உரிய ஆவணங்களை உடைய டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: உரிய ஆவணங்களையுடைய டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவமனை
மருத்துவமனை

By

Published : Jun 8, 2020, 1:24 PM IST

டெல்லி அரசுக்கு கீழ் இயங்கிவரும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் உரிய ஆவணங்களையுடைய டெல்ல வாழ் மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்துவருகிறது. இதனால் படுக்கை வசதிகள், உணவு, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

எனவே, டெல்லியின் கோவிட்-19 வழிமுறைகள், 2020இன் படி உரிய ஆவணங்களையுடைய டெல்லி வாழ் மக்களை மட்டுமே மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டும். உடலுறுப்பு மாற்றம் செய்தவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்வடர்களுக்கு முன்புபோல் சிகிச்சை அளிக்கலாம். அது தவிர, சாலை விபத்துக்குள்ளானர்கள், ஆசிட் வீச்சுக்குள்ளானவர்களுக்கும் மருத்துவமனைகள் அனுமதி தரலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் உத்தரவு

வாக்காளர் அடையாள அட்டை, வங்கி/தபால் அலுவலக பாஸ் புக், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மின் கட்டண பில், கேஸ் சிலிண்டர் பில் ஆகிய ஏதேனும் ஒன்றை உரிய ஆவணமாக மருத்துவமனையில் சமர்பிக்கலாம் என நோயாளிகளுக்கு டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறாராக இருப்பின் பெற்றோரின் ஆவணங்களை சமர்பித்தாக வேண்டும். டெல்லியில் இதுவரை 27,654 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 761 பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ரிசார்ட் அரசியல் : மாநிலங்களவை தேர்தலையொட்டி குஜராத்தில் அரசியல் கூட்டு தொடங்கியதா?

ABOUT THE AUTHOR

...view details