டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக தேசிய தலைநகரில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற செய்தி அம்மாநில மக்கள் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. அதற்குத் தேவையும் இல்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த வார தொடக்கத்தில், டெல்லியில் கரோனா வைரசின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டது. தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பாதுகாப்பு நெறிமுறைகளை மீறும் சந்தைகள், கரோனா பரவலின் மையப் புள்ளிகளாக இருக்கும் பகுதிகளை சில நாள்களுக்கு மூடலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.