இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு 109 பேர் உயிரிழப்பு!
டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு 109 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆயிரத்து 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 109 பேர் உயிரிழப்பு COVID-19 death toll rises to 109 COVID-19 death toll Health Ministry சுகாதாரத் துறை அமைச்சகம், இந்தியாவில் கரோனா உயிரிழப்பு கரோனா பாதிப்பு, அச்சம், பரவல், சுகாதாரத் துறை அமைச்சகம்
By
Published : Apr 6, 2020, 11:49 AM IST
நாட்டில் கரோனா (கோவிட்-19) வைரஸ் பாதிப்பு குறித்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டில் நான்காயிரத்து 67 பேர் கரோனா (கோவிட்19) பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு 109 பேர் உயிரிழந்துள்ளனர். 291 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டிலேயே அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் கரோனாவுக்கு 45 பேரும், குஜராத்தில் 11 பேரும், மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது பேரும், தெலங்கானா மற்றும் டெல்லியில் தலா ஏழு பேரும், தமிழ்நாடு, பஞ்சாபில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் உயிரிழப்பு நான்கு ஆக உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் தலா மூன்று பேரும், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளத்தில் தலா இருவரும், பிகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு மாநிலங்கள் வாரியாக
எண்
மாநிலங்கள்
கோவிட்-19 பாதிப்பு
01
மகாராஷ்டிரா
690
02
தமிழ்நாடு
571
03
டெல்லி
503
04
தெலங்கானா
321
05
கேரளா
314
06
ராஜஸ்தான்
253
07
உத்தரப் பிரதேசம்
227
08
ஆந்திரா
226
09
மத்தியப் பிரதேசம்
165
10
கர்நாடகா
151
11
குஜராத்
122
12
ஜம்மு காஷ்மீர்
106
13
ஹரியானா
84
14
மேற்கு வங்காளம்
80
15
பஞ்சாப்
68
16
பிகார்
30
17
அசாம்
26
18
உத்ரகாண்ட்
26
19
ஒடிசா
21
20
சண்டிகர்
18
21
லடாக்
14
22
இமாச்சலப் பிரதேசம்
13
23
அந்தமான் தீவுகள்
10
24
சத்தீஸ்கர்
09
25
கோவா
07
26
புதுச்சேரி
05
27
ஜார்க்கண்ட்
03
28
மணிப்பூர்
03
29
மிசோரம்
01
30
அருணாச்சலப் பிரதேசம்
01
இந்தத் தகவல்கள் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.