மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,897 பேருக்கு கரோனா தீநுண்மி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 332ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் 70 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதில் மகாராஷ்டிராவில் 31 பேர், குஜராத்தில் 19 பேர், மத்தியப் பிரதேசத்தில் ஏழு பேர், ராஜஸ்தானில் ஐந்து பேர், உத்தரப் பிரதேசத்தில் மூன்று பேர், மேற்கு வங்கத்தில் இரண்டு பேர், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதனால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,007ஆக அதிகரித்துள்ளது.
அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிராதான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 181 பேர், மத்தியப் பிரதேசத்தில் 120 பேர், டெல்லியில் 54 பேர், உத்தரப் பிரதேசத்தில் 34 பேர், ஆந்திராவில் 31 பேர், தெலங்கானாவில் 26 பேர், தமிழ்நாட்டில் 25 பேர், மேற்கு வங்கத்தில் 22 பேர், கர்நாடகாவில் 20 பேர் பஞ்சாபில் 19 பேர், ஜம்மு காஷ்மீரில் எட்டு பேர், கேரளாவில் நான்கு பேர், ஜார்கண்ட், ஹரியானாவில் தலா மூன்று பேர், பிகாரில் இரண்டு பேர், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, அஸ்ஸாமில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை 9,318 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் 3,744 பேர், டெல்லியில் 3,314 பேர், மத்தியப் பிரதேசத்தில் 2,387 பேர், ராஜஸ்தானில் 2,364 பேர், தமிழ்நாட்டில் 2,058 பேர், உத்தரப் பிரதேசத்தில் 2,053 பேர், ஆந்திராவில் 1,259 பேர், தெலங்கானாவில் 1,004 பேர், மேற்கு வங்கத்தில் 725 பேர், ஜம்மு காஷ்மீரில் 565 பேர், கர்நாடகாவில் 523 பேர், கேரளாவில் 485 பேர், பிகாரில் 366 பேர், பஞ்சாபில் 322 பேர், ஹரியானாவில் 310 பேர், ஒடிசாவில் 118 பேர், ஜார்கண்டில் 103 பேர், உத்தரகாண்டில் 54 பேர், சண்டிகரில் 56 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், சத்தீஸ்கரில் 38 பேர், அந்தமான் நிகோபார் தீவுகளில் 33 பேர், லடாக்கில் 22 பேர், மேகாலயாவில் 12 பேர், புதுச்சேரியில் எட்டு பேர், கோவாவில் ஏழு பேர், மணிப்பூர், திரிபுராவில் தலா இரண்டு பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் 897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,695ஆக அதிகரித்துள்ளது. அதில் 111 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் தற்போது 22 ஆயிரத்து 629 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பஞ்சாபில் புலிக்கு கரோனாவா?