தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் பாதிப்படைந்த செர்ரி விவசாயிகள்! - செர்ரி விலை வீழ்ச்சி

கரோனா வைரஸ் காரணமாக செர்ரி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததையடுத்து, விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

covid-19-cherry-farmers-suffer-in-himachal-sales-down-by-60-80-pc
covid-19-cherry-farmers-suffer-in-himachal-sales-down-by-60-80-pc

By

Published : Jun 21, 2020, 8:29 PM IST

Updated : Jun 22, 2020, 3:03 AM IST

இந்தியாவில் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து தொழில்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் பலரும் வேலையிழந்து வருகின்றனர்.

இதனால் செர்ரி பழங்களின் விலை சந்தையில் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிட்டத்தட்ட செர்ரி தொழிலில் ஈடுபடுபவர்கள் 60 முதல் 80 சதவிகிதம் வரை நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் செர்ரி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

கரோனாவால் பாதிப்படைந்த செர்ரி விவசாயிகள்

இதுகுறித்து செர்ரி விவசாயிகள் பேசுகையில், ’’செர்ரி பழங்களின் விலை ரூ.100ல் இருந்து ரூ. 30ஆக சந்தையில் குறைந்துள்ளது. கரோனா வைரஸ் சூழலால் செர்ரி பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான போக்குவரத்து ஏற்பாடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததும் இந்தப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம்'' என்றார்.

Last Updated : Jun 22, 2020, 3:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details