உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாளை (மார்ச்16) முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ஆம் தேதி வரை வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான் உள்ளிட்ட எல்லைகளில் அனைத்து வகையான பயணிகள் இயக்கங்களும் நிறுத்திவைக்கப்படுகின்றன.
இந்த உத்தரவு மார்ச் 16 (அதாவது நள்ளிரவு 12 மணி) முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தப் பகுதிகளில் தீவிரமான சுகாதார ஆய்வு இருக்கும். தீவிர ஆய்வுக்குப் பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.