தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தானேவில் 2 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு - தானே மாவட்டம் கொரோனா பலி

மும்பை: தானேவில் நேற்று ஒரே நாளில் 184 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2006ஆக உயர்ந்துள்ளது.

Maharashtra
Maharashtra

By

Published : May 10, 2020, 5:10 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரம். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல், மகாராஷ்டிர மாநில அரசு திணறிவருகிறது. இங்கு 779 பேர் இந்தக் கொடிய வைரஸிற்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தானே மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது. தானேவில் நேற்று ஒரேநாளில் 184 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2006ஆக அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் மேலும் இரு காவலர்களுக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details