உலகை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ், இந்தியாவில் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. புதிதாக மூன்று பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.
இந்தச் சூழிலில், வைரஸை தடுக்கும் பொருட்டு அரசின் நடவடிக்கைள், முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சௌபி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமைச்சரக தலைமைச் செயலாளர் ராஜீவ் கௌபா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.