மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தலைமையில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.கே. சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிஷ்சால் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு இரண்டு நாள்கள் (ஜூலை 19, 20) பிகார் தலைநகர் பாட்னா, கயாவில் சுகாதார முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த மத்திய குழு, பின்னர் மாநில சுகாதார துறைக்கு சில அறிவுரைகளை அறிவுறுத்திள்ளது.
பின்னர், “பிகாரில் தற்போதை சுகாதார நிலையை பார்க்கும் போது, மாநிலத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு கூடும். அதனால் மாநிலத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி கரோனா பாதித்தவர்களை சார்ந்தவர்களை உடனடியாக கண்டறிந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அனுராக் நாராயணா மஹத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர், மாநில சுகாதாரத் துறை அலுவலர்களுடனும் கலந்துரையாடினர்.