இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் பாதிப்பு தீவிரமடைந்துவருவதை அடுத்து போர்க்கால அடிப்படையில் அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரத்து 975 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 480 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:
இந்தியாவில் இதுவரை மொத்தம் 91 லட்சத்து 77 ஆயிரத்து 840 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86 லட்சத்து நான்காயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 218 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பரிசோதனை நிலவரம்:
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (நவ.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 99 ஆயிரத்து 545 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 13 கோடியே 36 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டி.ஆர்.பி. சார்ந்து இயங்கும் மீடியாக்களை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்