இந்தியாவில் கரோனா தீநுண்மியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 29,572 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 939 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமூகப்பரவலைத் தடுத்த இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
கரோனா தீநுண்மி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களை எளிதாகத் தாக்கக்கூடியது. குறிப்பாக, 50 வயது கடந்தவர்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் மருத்துவ குணமுடைய ’ஆயுஷ் குவாத்’ எனப்படும் மூலிகைத் தேநீரைப் பருக பரிந்துரைத்துள்ளது.