ஊரடங்கு உத்தரவு காரணமாக பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் பயணம் செய்பவர்களின் விவரங்களும் சரிபார்க்கப்படுகின்றன.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் காவல் நிலையம் அருகில் சொந்த ஊருக்கு பயணம் செய்ய இருந்தவர்களின் விவரங்களை ஆஷா (சமூக சுகாதார ஆர்வலர்) என்பவர் சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது விட்டல் கஸ்தி என்ற பயணி அவரைத் தாக்கியுள்ளார்.