கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிரது. இதுவரை 562 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடெங்கும் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கண்காணிப்பில் இருக்கும்போது டிப்ஸ் தேவையா என்று நக்கல் தொனியில் உமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது அதிலிருந்து தப்பிக்க யாருக்காவது டிப்ஸ் தேவையா. ஏனென்றால் அதில் எனக்கு பல மாத அனுபவம் உள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா நேற்று விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மெகபூபா முஃப்தியை உடனடியாக விடுவியுங்கள் - உமர் அப்துல்லா கோரிக்கை