தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புலம்பெயர்தல், கரோனாவை விட மிகப்பெரிய அச்சுறுத்தல்!

கடுமையான முழு அடைப்பின் காரணமாக பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளுக்குச் செல்ல மக்கள் மைல்கள் கடந்து நடந்தே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும், செய்தித் தாள்களிலும் காண முடிகிறது.

COVID 19 and Visibility of Migrant Workers  Migrant Workers  COVID 19  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொன் முட்டையிடும் வாத்துகள், கரோனா அச்சுறுத்தல், முழு அடைப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு
COVID 19 and Visibility of Migrant Workers Migrant Workers COVID 19 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொன் முட்டையிடும் வாத்துகள், கரோனா அச்சுறுத்தல், முழு அடைப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு

By

Published : Apr 7, 2020, 11:21 AM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாள்கள் முழு அடைப்பு என்று இந்திய பிரதமரால் திடீர் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதன் பல்வேறு வெளிப்பாடுகளில் ஒன்று, நாட்டில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீதான பார்வை.

தொழிலாளர்கள்

அவர்களில் சிலர் செங்கல் சூளை, கட்டுமானத் தொழிலாளர்கள், மிட்டாய் கடைகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொத்தடிமைகளாக வேலை செய்பவர்கள், துறைமுகங்களில் சுமை தூக்குபவர்களாக, ஆலைகள் மற்றும் விவசாயத்துறையில் பணியாற்றுபவர்கள் என பல துறைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றுகின்றனர்.

அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அல்லது தனியாக குடியேறுகின்றனர். பெண்கள் விவசாய தொழிலாளர்களாக பணியாற்றுவதற்காக மாநிலங்கள் முழுவதும் பயணிக்கின்றனர். வளமான புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான இத்தகைய தொழிலாளர்கள் பெரும்பாலும், பிகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த கடுமையான முழு அடைப்பின் காரணமாக பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு செல்ல மக்கள் மைல்கள் கடந்து நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும், செய்தித் தாள்களிலும் காண முடிகிறது.

புலம் பெயரும் தொழிலாளர்கள்

இது உணவு, தங்குமிடம் மற்றும் பண உதவி செய்யும் வகையில் சில தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மனச்சாட்சியை தூண்டிவிட்டது. இதனால் சில மாநில அரசாங்கம் அவர்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளன. 21 நாள் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து நகர்ந்து வரும் புலம்பெயர்ந்தோருக்கான போக்குவரத்து மற்றும் பிற வசதிகளை கோரும் பொதுஜன முன்னணிக்கு உச்ச நீதிமன்றம் பதிலளித்தபோது, கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த அச்சமும் பீதியும் மாறிவிட்டது.

உண்மையில், கரோனா தொற்றைவிட ஒரு பெரிய அச்சுறுத்தல் மக்களின் புலம்பெயர்தலாக உள்ளது. நகரங்களிலிருந்து உள்நாட்டிற்கு குடியேறியவர்கள் திடீரென வெளியேறியதன் சிக்கல்களைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரியது.


புலம்பெயர்ந்த தொழிலாளர்- தெலங்கானா அரசாங்கத்தின் பதில்
தெலங்கானா அரசு, 3.5 லட்சம் புலம்பெயர்ந்தோரின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள், பிகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் இந்தியிலும் பேசினார்.

அவர் கூறுகையில், “தெலங்கானா முதலமைச்சராக, நான் சொல்கிறேன், எத்தனை கோடி ரூபாய் உங்களுக்கு செலவிட வேண்டுமமானாலும் நாங்கள் உங்களை திரும்பிச் செல்லுங்கள் என்று சொல்ல மாட்டோம், பணத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் வசதியாக இருங்கள்.

'தெலங்கானாவிலோ அல்லது எந்த மாநிலத்திலோ யாரும் பட்டினி கிடையாது' உங்கள் சொந்த இடங்களை அடைய தெலங்கானாவை விட்டு வெளியேற தீவிர முயற்சிகள் செய்ய வேண்டாம்” என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும், சேவை செய்யவும் நீங்கள் இங்கு (தெலங்கானாவுக்கு) வந்துள்ளீர்கள். எனவே, நாங்கள் உங்களை ஒரு குடும்ப உறுப்பினராக பார்க்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களை கவனித்துக்கொள்வோம். ' என்று தெரிவித்தார்.

மார்ச் 30 ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தெலங்கானாவின் வளர்ச்சியில் பங்காளிகள் என்ற முதலமைச்சரின் உணர்வுகளை பிரதிபலித்தது.

மேலும் இத்தகைய மோசமான சூழ்நிலையில், அவசர அடிப்படையில் அனைத்து வகையிலும், அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சரின் உத்தரவின்படி, அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தலா ஒரு நபருக்கு 12 கிலோ அரிசி (அல்லது தலைக்கு 12 கிலோ கோதுமை) இலவசமாகவும், உடனடி நிவாரணமாக ரூ.500ம் வழங்க ரூ.29.96 கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் தெலங்கானா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு அட்டைகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமைப்பதற்கான வசதி இல்லாவிட்டால் சமைத்த உணவு மற்றும் தங்குமிடம், நீர், மருத்துவ வசதி போன்ற பிற அடிப்படை வசதிகளையும் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாநிலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை முதலமைச்சர் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். இருப்பினும், அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருந்தாலும் கிடைக்கப்பெறும் என்று நம்பப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, இது இன்று நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்பட்ட மிகவும் தீவிரமான திட்டங்களில் ஒன்றாகும். புலம்பெயர்ந்த தொழிலாளியின் நலன் அனைத்து வகையிலும் உறுதியளிக்கப்படுகிறது. சில உள்ளூர் அரசாங்கங்களும், கிராம பஞ்சாயத்துகளும் 12 கிலோ அரிசி மற்றும் ரூ. 500 போன்றவற்றை வழங்க தொடங்கியுள்ளன. இருப்பினும், அரிசி ஆலைகளைத் தக்கவைத்துக்கொள்வதிலும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் அறுவடைக்கு தயாராக இருப்பவற்றை அறுவடை செய்வதிலும் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கைக் காண வேண்டியது அவசியமாக உள்ளது.


விவசாயிகள்-அரசாங்கத்தின் பதில்
கோவிட்-19 முழுஅடைப்பு நடைபெறும் இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஆதரவையும் சலுகைகளையும் வழங்கினார்.
தெலங்கானா புதிய மாநிலமாக உருவான பின்னர் நீர்ப்பாசனத்தில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், 1.05 கோடி டன் நெற்பயிர் அறுவடை செய்ய இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி 50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டன. வரலாற்று சாதனையாக 40 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தேவையான அறுவடை இயந்திரங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் ஏற்கனவே உருவாக்கியதுடன், டிராக்டர் பொருத்தப்பட்ட அறுவடை செய்பவர்களை நகரங்களிலிருந்து அணிதிரட்டி அறுவடை செய்வதற்காக வயல்களுக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து 1500 அறுவடை செய்பவர்களை வரவழைக்கவும் திட்டமிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில், முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், சந்தை சரிந்துவிட்டதால், விவசாயிகளை மீட்பது மற்றும் அனைத்து தானியங்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது அரசாங்கம் தான்.
உங்கள் விளைபொருள்களை அந்தந்த கிராமங்களிலிருந்து அரசாங்கமே வாங்கும். விவசாயத் துறை விவசாயிகளுக்கு கூப்பன்களை வழங்கும், அதன்படி, அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் உணவு தானியங்களை வாங்குவார்கள். இந்த கொள்முதல் செயல்முறை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி மே நடுப்பகுதி வரை தொடரும். கட்டணம் செலுத்துவதைப் பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது.
விவசாயி தனது வங்கி கணக்கு எண்ணை அறிவித்தால், பணம் நேரடியாக அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். இது தொடர்பாக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு 30,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் சந்தைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், அனைத்து சமூக இடைவெளி மற்றம் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதன் மூலம் கிராமங்களில் முழு கொள்முதல் நடக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து லாரிகளை தடுக்க வேண்டாம் என்று கிராமவாசிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

கரோனா அச்சம் காரணமாக 21 நாட்கள் பூட்டுதல்
நெல் கொள்முதல் செய்வதற்கு 70 லட்சம் கோணிப் பைகள் தேவைப்படும் என்றும் அரசு மதிப்பிட்டுள்ளது. மாநிலத்தில் 35 லட்சம் பைகள் மட்டுமே உள்ளன. கொல்கத்தாவில் உள்ள கோணிப்பை உற்பத்தியாளர்கள் முழு அடைப்பின் காரணமாக தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்ட நிலையில் அரசு சவாலை எதிர்கொண்டு மாற்று வழியை தேடுகிறது. இது தொடர்பாக கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியைத் தொடர்பு கொள்வார் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். வேளாண் பொருளாதாரத்தில் தெலுங்கானாவில் உள்ள நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் முற்றிலும் பிகாரிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியுள்ளன.

இதில் 95 ஆயிரம் அரிசி ஆலை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் தலை-சுமை தூக்குபவர்கள், அரிசி லாரிகளில் பொருள்களை ஏற்றி இறக்குகிறார்கள். பலர் 'ஹோலி' பண்டிகைக்காக பிகார் சென்றனர்.

இப்போது முழு அடைப்பின் காரணமாக தொடர்ந்து அங்கே சிக்கித்கொண்டனர். அவர்கள் இல்லாமல் அரிசி பொருளாதாரம் சரிந்து விடுகிறது.
அறுவடை செய்பவர்களுக்கு ஏற்பாடு செய்ய முடியும், கோணிப்பைகள் ஏற்பாடு செய்யலாம், கிராமங்களில் இருந்து அரிசி ஆலைகள் மற்றும் அரிசி ஆலைகள் முதல் குடோன்கள் வரை லாரிகளுக்கு லோடுகளை ஏற்றிச் செல்லும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாமல் எல்லாம் நின்றுவிடுகிறது.
தெலங்கானாவுக்கு பிகாரிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் தேவை. தொழிலாளர்கள் திரும்பி வருமாறு கோருவதற்காக அவரது தலைமைச் செயலாளர் தனது பிகார் பிரதிநிதியுடன் பேசுவார் என்று முதலமைச்சரின் அறிக்கை கூறுகிறது.

தேவைப்பட்டால், பிகார் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வர சில சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய அவர் மத்திய அரசுடன் பேசுவார்.

எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளி நம் வாழ்விற்கு இன்றியமையாதவர் என்று புரிந்துகொள்ள கோவிட்-19 அவசியமானதானதே. நமது நல்வாழ்வு, மற்றும் பாதுகாப்பு ஆகியவை நமது பொருளாதாரத்திற்கு அவர்கள் அளித்த தனித்துவமான பங்களிப்பைப் பொறுத்தது என்று அது நமக்குச் சொல்கிறது.

தங்க முட்டைகளை இடும் வாத்துக்களை கொல்ல இந்த ஸ்தாபனத்தால் முடியாது. அவர்கள் தொடர்ந்து ஈர்க்கப்பட வேண்டும். தேடப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு. தங்குமிடம் மற்றும் கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும்.

அவர்கள் கேள்வி கேட்காமல் தொடர்ந்து உற்பத்தி செய்கிறார்கள். இப்போது கூட அவர்கள் உரிமைகளைக் கொண்ட உரிமைதாரர்களாக கருதப்படுவதில்லை.

கண்ணியத்துடன் குடிமக்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் மாநில நலனையும் தொண்டு நிறுவனத்தையும் சார்ந்திருக்கும் பயனாளிகளாக மட்டுமே கருதப்படுகிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்களுக்குத் தேவை.

நாங்கள் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்தவர்கள் மற்றும் சமமான குடிமக்கள் என்று அரசு தொடர்ந்து அவர்களுக்கு நம்பிக்கைகொடுக்கும்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details