புதிய கரோனா வைரஸ் கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு குஜராத்தில் எட்டு ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தமட்டில் 513 ஆக உள்ளது. இதற்கிடையில் திங்கள்கிழமை (மே11) 235 பாதிப்பாளர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.
மாநிலத்தில் திங்கள்கிழமை மட்டும் 347 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 268 பேர் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வதோதரா (29), சூரத் (19), காந்தி நகர் (10), பஞ்சமஹலஸ் மற்றும் பனஸ்கந்தா (தலா நான்கு பேர்), பரூச், சபர்கந்தா, ஜாம்நகர், பதான் மற்றும் போடட் (தலா மூன்று பேர்), ஆனந்த், மேக்சனா (தலா இருவர்), பாவ்நகர், நர்மதா, ஆரவல்லி ஆகிய இடங்களில் தலா ஒருவர் என உள்ளனர்.