தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2020, 1:00 PM IST

ETV Bharat / bharat

குஜராத்தில் 70 ரயில் பெட்டிகள் கோவிட்-19 வார்டுகளாக மாற்றம்!

அகமதாபாத்: குஜராத்தில் 70 ரயில் பெட்டிகள் கோவிட்-19 வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்றப்பட்டுவருகின்றன.

Ahmedabad  Gujarat  COVID-19  Western Railways  Isolation ward  Train isolation ward  Coronavirus  குஜராத்தில் 70 ரயில்கள் கோவிட்19 வார்டாக மாற்றம்!  கரோனா வைரஸ்  குஜராத் ரயில் பெட்டிகள்
Ahmedabad Gujarat COVID-19 Western Railways Isolation ward Train isolation ward Coronavirus குஜராத்தில் 70 ரயில்கள் கோவிட்19 வார்டாக மாற்றம்! கரோனா வைரஸ் குஜராத் ரயில் பெட்டிகள்

குஜராத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்று நோயாளிகள் 70 ரயில் பெட்டிகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இதற்காக அவை தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அகமதாபாத் ரயில்வே மேலாளர் தீபக் குமார் ஜா கூறுகையில், “கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் அகமதாபாத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதனால் கரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், கரோனா நோய்த் தொற்று நோயாளிகளுக்காக எழுபது ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்படுகின்றன. இந்த பெட்டிகள் ஐந்து டிப்போக்களில் நிறுத்தப்படும்.

மணிநகர் டிப்போவில் 25 பெட்டிகள் தனிமை வார்டுகளாக அமைக்கப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் எட்டு நோயாளிகளுக்கு இடமளிக்க முடியும். ரயில் பெட்டியில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ரயில் பெட்டியின் கழிப்பறைகள் குளியல் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள், பணியாளர்களுக்கென ஒரு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க ஐந்தாயிரம் ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'மனைவியை கோவிட்19 என்று அழைத்த கணவர்'- கொதித்தெழுந்த சங்கத் தலைவி!

ABOUT THE AUTHOR

...view details