தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் கோவிட்-19 பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு! - கரோனா வைரஸ் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் பாதிப்பாளர்கள் 22 பேர் புதிதாக இன்று கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus in Karnataka  Bengaluru covid-19  Belagavi corona  Covid-19 lockdown  கர்நாடகாவில் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு  கரோனா வைரஸ் பாதிப்பு  கர்நாடகா
Coronavirus in Karnataka Bengaluru covid-19 Belagavi corona Covid-19 lockdown கர்நாடகாவில் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு கரோனா வைரஸ் பாதிப்பு கர்நாடகா

By

Published : May 1, 2020, 12:44 AM IST

கர்நாடக மாநிலத்தில், புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பாளர்கள் 22 பேர் இன்று புதிதாக கண்டறியப்பட்டனர். இவர்களில் 14 பேர் பெலகாவியிலும், மூன்று பேர் பெங்களூருவின் புறநகர் பகுதியிலும், இருவர் விஜயநகராவிலும் வசிப்பவர்கள்.

மற்ற மூன்று பேரும் தேவாங்கீர், தக்ஷின கன்னடா மற்றும் துமகூரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த 22 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதனால் கர்நாடகாவில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 223 பேர் சிகிச்சைக்கு பின்னர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுக்க கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு 33 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஆயிரத்து 75 ஆக உள்ளது.

உலகில் கரோனா கிருமிக்கு 32 லட்சத்து 9 ஆயிரத்து 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிப்பு 2 லட்சத்து 28 ஆயிரத்து 57 ஆக உள்ளது.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை புறக்கணித்த அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details