தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திரிபுராவில் மேலும் 18 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா! - கரோனா வைரஸ் செய்திகள்

திரிபுராவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படை வீரர்களில், மேலும் 18 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரிபுராவில் மேலும் 18 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரோனா!
திரிபுராவில் மேலும் 18 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரோனா!

By

Published : May 7, 2020, 3:44 PM IST

நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக, மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் நீக்கப்பட்டாலும், பொது மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர். அந்தவகையில், திரிபுராவில் கடந்த இரண்டு நாள்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் மேலும் 18 பாதுகாப்புப் படை வீரர்கள், மூன்று குழந்தைகள், ஒரு பெண் உட்பட 22 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது பதிவில், அவர் இதுவரை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் இரண்டு பேர் குணமடைந்ததால், தற்போது 62 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் தீவிரமாக சிகிச்சையளித்துவருகிறது. அதனால் மக்கள் யாரும் பயப்படதேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

திரிபுரா மாநில சுகாதார துறை தெரிவித்த தகவலின்படி, தற்போது சிகிச்சை பெற்றுவரும் 62 நபர்களில் 54 பாதுகாப்புப் படை வீரர்கள், இரண்டு மகளிர், ஐந்து குழந்தைகள் அடங்குவர். இவர்களில், பெரும்பாலோனார் அகர்டாலாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனிடையே, இன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களுடன் தொடர்பில் இருந்த 90 மருத்துவப் பணியாளர்கள், 241 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 331 நபர்களின் எச்சில் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:விசாகபட்டிணம் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு: 8 பேர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details