தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கெஜ்ரிவால் உள்ளிட்ட மூவர் மீதான பிடியாணைக்குத் தடை - தடை உத்தரவு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்ட மூவர் மீதான பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைக்கு தடை விதித்து ரவ்ஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ்

By

Published : Apr 24, 2019, 3:17 PM IST

சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் ரவ்ஸ் அவென்யூ நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சுவராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஏப்ரல் 23ஆம் தேதி அந்த மூவர் மீதும் பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

அப்போது, கெஜ்ரிவால், சிசேடியா, யோகேந்திர யாதவ் ஆகிய மூன்று பேருக்கும் இந்த பிடியாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என அவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தனர். அதற்கு நீதிமன்றம், இது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 24ஆம் தேதி) இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்த நீதிமன்றம், முன்னதாக பிறப்பித்த பிடியாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வழக்கின் பின்னணி:

2013 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கறிஞர் சுரேந்தர் ஷர்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அக்கட்சி அவரை தேர்தலில் பேட்டியிடுவதில் இருந்து நீக்கம் செய்தது.

இது அவருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details