தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சின்மயானந்தாவுக்கு ஜாமின் மறுப்பு! - சின்மயானந்தா வழக்கு

லக்னோ: சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்தாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

chinamyanand

By

Published : Sep 30, 2019, 11:30 PM IST

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவர் சின்மயானந்தா. அவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக உத்திர பிரசாத்தைச் சேர்ந்த 23 வயது சட்டக் கல்லூரி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்ற கண்காணிப்பில் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவி, தன்னிடமிருந்து ரூ. 5 கோடி பறிக்க முயன்றதாக சின்மயானந்தா அளித்த புகாரைத் தொடர்ந்து, சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையிலுள்ளனர். இந்நிலையில் ஜாமின் பெற சின்மயானந்தா தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல் ஜாமீன் வேண்டி சட்டக்கல்லூரி மாணவி தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: 'விடாது கருப்பு' - ப. சிதம்பரமும் ஐஎன்எக்ஸ் மீடியாவும்!

ABOUT THE AUTHOR

...view details