தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ப. சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - Court postponed

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்

By

Published : Aug 23, 2019, 1:13 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்தியமுன்னாள்அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு முன்பிணை வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையை திங்கள்கிழமை விசாரிப்பதாகக் கூறி ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details