1999ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக திலீப் ராய் இருந்தார். அவர் பதவி வகித்த காலத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது. அதில் திலீப் ராய் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது.
அதைத்தொடர்ந்து அக்.6ஆம் தேதி டெல்லி மாவட்ட நீதிமன்றம், "திலீப் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதையடுத்து அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தவந்த நிலையில், தற்போது அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.