கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் தனிச்செயலாளர் சிவசங்கர் அமலாக்கத்துறை பிடியில் உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடத்திவரப்பட்ட கடத்தல் தங்கம் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ தங்கம் பிடிபட்டது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய புலனாய்வு குழுவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுவரை 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஸ்வப்னா சுரேஷ், சரீத், சந்தீப் நாயர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் பினராயி விஜயனின் தனிச்செயலாளர் சிவசங்கர் நவம்பர் 24ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.
தற்போது அமலாக்கத்துறை வசமுள்ள அவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் (டிச.1) முடிவடைந்தது. இந்நிலையில் உள்ளூர் நீதிமன்றம் சிவசங்கருக்கு கூடுதல் 7 நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.எம்.ரவீந்திரன்