ஜெய்ப்பூர்:குஜராத் மாநிலம் கோத்ரா சபர்மதி ரயில் நிலையத்துக்கு 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வந்த ரயிலில், எஸ்-6 பெட்டியில் இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் இருந்தனர்.
இந்த ரயில் பெட்டி மீது 140 லிட்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் படாலியா.
இவரின் 54 வயதான மனைவி 70 விழுக்காடு மாற்றுத் திறனாளியாக உள்ளார். 24 வயதான மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்.
இந்த கரோனா நெருக்கடி காலத்திலும், எனது மனைவி மற்றும் மகனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. ஆகவே எனக்கு பிணை வழங்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் யாகூப் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.