தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ராவத்தின் பிணை மனு நிராகரிப்பு! - பாதிக்கப்பட்ட ஃபாரூக் அலி

டெல்லி : வடகிழக்கு டெல்லி வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹரிந்தர் ராவத்தின் பிணை மனுவை கர்கர்டூமா மாவட்ட சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டெல்லி வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட ராவத்தின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
டெல்லி வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட ராவத்தின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

By

Published : Jul 22, 2020, 6:16 AM IST

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தியவர்களுக்கும், அந்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 1427 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அப்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில், வன்முறை குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஹரிந்தர் ராவத், தனக்கு பிணை வழங்கக் கோரி டெல்லி கர்கர்டூமா மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஜூலை 21) கர்கர்டூமா மாவட்ட சிறப்பு நீதிமன்ற மேலதிக அமர்வு நீதிபதி வினோத் யாதவ் முன்பு வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட ஹரிந்தர் ராவத்திற்கு ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர் அர்ஜுன் சிங், "ஹரிந்தர் ராவத் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் இந்த வன்முறை சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுவரை அவர் மீது எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவரது பெயர் இந்த வழக்கில் வேண்டுமென்றே இணைக்கப்பட்டுள்ளது.

வன்முறை நடந்ததாகக் கூறப்படும் பகுதியின் அருகிலேயே தான் அவரது குடியிருப்பும் உள்ளது. வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோது, ​​ராவத் தனது வீட்டை விட்டு வெளியே வந்து வெறுமனே சம்பவ இடத்தில் நின்றிருந்தார். அவர் எந்தவொரு வன்முறையிலும் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கு பிணை வழக்க வேண்டுமென கோருகிறோம்" என்றார்.

இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞர் ஜிதேந்தர் ஜெயின், "குற்றஞ்சாட்டப்பட்ட ராவத்திற்கு பிணை வழங்கவே கூடாது. குற்றஞ்சாட்டப்பட்ட ஹரிந்தர் ராவத் சூறையாடலில் ஈடுபட்ட வன்முறை கும்பலின் ஒரு ஆளாகவே இருந்துள்ளார். அந்த குண்டர்கள் கும்பல் அப்பகுதியில் இருந்த கடைகளை சூறையாடியது.

அந்த கும்பலால் தான் வழக்கை தொடுத்திருக்கும் ஃபாரூக் அலியின் கடையும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. புகார்தாரர் ஃபாரூக் அலி, ராவத்தை வன்முறை கும்பலைச்சேர்ந்தவர் என்றே தெளிவாக அடையாளம் காட்டுகிறார். அந்த நேரத்தில் ரோந்து பணியிலிருந்த காவல்துறை அலுவலர், ஹரிந்தர் ராவத்தை அடையாளம் கண்டு அவர் செய்த குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார். வன்முறையில் அவர் தீவிரமாக பங்குபெற்றதற்கு வலுவான ஆதாரமாக உள்ள சி.சி.டி.வி காட்சிகளிலும் அவர் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார்" என கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வடகிழக்கு டெல்லி வன்முறையில் பல வீடுகள் மற்றும் கடைகள் அழிக்கப்பட்டதன் சாட்சியாக உள்ள சி.சி.டி.வி காட்சிகளில் தெளிவாக காணப்படும் ராவத்திற்கு பிணை அளிக்க முடியாதென் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details