தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலமோசடி வழக்கு: விடுவிக்கப்பட்ட கவுதம் கம்பீர்! - டெல்லி மாநிலம்

நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Gautam Gambhir
கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்

By

Published : Dec 11, 2020, 6:34 AM IST

டெல்லி: வீடு கட்ட நிலம் வாங்குபவர்களை ஏமாற்றுவது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ருத்ரா பில்ட்வெல் ரியால்டி பிரைவேட் லிமிடெட் மற்றும் எச்.ஆர் இன்ஃப்ராசிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் இயக்குநராகவும் பிராண்ட் தூதராகவும் கம்பீர் இருந்தார். இதன்மூலம் வீட்டுத் திட்டத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை முன்பதிவு செய்து தருவதாக மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக 2016ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் டெல்லி காவல் துறை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கம்பீர் உள்பட பலருக்கு எதிராகச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்திருந்தது.

கம்பீர் மற்றும் நிறுவனத்தைத் தவிர, அதன் மற்ற விளம்பரதாரர்களான முகேஷ் குரானா, கவுதம் மெஹ்ரா, பபிதா குரானா ஆகியோரைக் குற்றவாளியாக அந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வழக்கிலிருந்து கம்பீர் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சர்வதேச மனித உரிமைகள் தினம்: சமத்துவ உலகை கட்டியெழுப்புவோம்!

ABOUT THE AUTHOR

...view details