உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பைக்கில் அமர்ந்தவாறு புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டரில், 'முகக் கவசம், ஹெல்மெட் அணியாமல் அமர்ந்த தலைமை நீதிபதி' என விமர்சித்து பதிவிட்டார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அதனால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷணை குற்றவாளி என அறிவித்து, அவர் மன்னிப்புக்கேட்க கால அவகாசம் அளித்தது.