தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியினர் மீது தாக்குதல் - தம்பதியினர் மீது தாக்குதல்

தும்குர் : கர்நாடக மாநிலம், நிர்மல் பகுதியில் வசித்து வரும் காதல் திருமணம் புரிந்த தம்பதியினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

couple-injured-in-attack-by-womans-father-in-karnataka
couple-injured-in-attack-by-womans-father-in-karnataka

By

Published : Oct 9, 2020, 10:12 PM IST

கர்நாடக மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினர் அக்‌ஷய் - நாகஜோதி. சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு நாகஜோதியின் வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் நேற்று (அக்.08) நாகஜோதியின் தேர்வுக்காக தம்பதியினர் இருவரும் வாசவி கல்லூரிக்கு சென்றுள்ளனர். தேர்வு முடிந்து மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்புகையில், கல்லூர் கிராமம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

காரில் வந்த அந்த நபர்கள், தம்பதியினர் மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்திவிட்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, விபத்தில் சிக்கிய இருவரும் சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியினர் மீது தாக்குதல்

இதையடுத்து அப்பகுதி மக்கள், இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் விசாரிக்கையில், ''இவர்கள் இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். யார் இவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றனர்.

இதையும் படிங்க:சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி விடுவிப்பு - மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details