கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் (34). இவரது மனைவி சுஜினி (24). இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுனில், சுஜினி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், நேற்று (ஜூன் 3) காலை கதவைத் தட்டினர்.
கேரளாவில் தம்பதி மரணத்தில் சந்தேகம்: காவல்துறை விசாரணை! - கேரளாவில் கணவர் மனைவி இறப்பில் சந்தேகம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே தம்பதி மரணத்தில் சந்தேகமடைந்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், வீட்டினுள்ளே இருந்து எவ்வித சத்தமும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, சுனில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், சுஜினி கழுத்தில் காயத்துடன் கீழே இறந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இச்சம்பம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். அதில், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக, மனைவியைக் கொன்று கணவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடித்திவருகின்றனர்.