தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சோனியா காந்தி உண்மையை கூற வேண்டும்'- சிவ்ராஜ் சிங் சவுகான் - மத்தியப் பிரதேசம்

போபால்: ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடமிருந்து நிதியுதவி பெற்றது ஏன் என்பது குறித்து சோனியா காந்தி பதில் கூற வேண்டும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.

Shivraj Singh Rajiv Gandhi Foundation United Nations Chhattisgarh Jan Samvad programme Hindi-Chini Bhai Bhai ராஜிவ் காந்தி அறக்கட்டளை சிவ்ராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேசம் ராமன்சிங்
Shivraj Singh Rajiv Gandhi Foundation United Nations Chhattisgarh Jan Samvad programme Hindi-Chini Bhai Bhai ராஜிவ் காந்தி அறக்கட்டளை சிவ்ராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேசம் ராமன்சிங்

By

Published : Jun 29, 2020, 2:10 PM IST

மத்தியப் பிரதேச முதலமைச்சர் காணொலி வாயிலான உரையில், “காங்கிரஸின் ராஜிவ் காந்தி அறக்கட்டளை ஏன் சீனாவிடமிருந்து பணம் பெற்றது என்பதை அறிந்துக் கொள்ள நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.

இந்த உண்மையை நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூற வேண்டும். சீனா கொடுத்த நன்கொடைக்கு எதிர்வினையாக அவர்கள் பல ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். ஜநாவில் சீனாவை நிரந்தர உறுப்பினராக்க வாதிட்டவர் ஜவஹர்லால் நேரு. இந்தியர்களும், சீனர்களும் சகோதர்கள் என்றார்.

ஆனால் 1962ஆம் ஆண்டில் சீனர்கள் இந்தியாவில் நுழைந்தது அவருக்கு தெரியாது. சீனர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டனர் என்று விவாதம் எழுந்தபோது, புல் கூட முளைக்காத பகுதியை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்று காங்கிரஸார் கூறினார்கள்.

ஆனால் இன்றைய சூழ்நிலை வேறு. இது நரேந்திர மோடியின் இந்தியா. நாங்கள் அமைதிக்கு ஆதரவாக நிற்கிறோம். நாம் யாரையும் தூண்ட மாட்டோம். ஆனால் யாராவது நம்மை தூண்டினாலும், அங்கிருந்து வெளியேற மாட்டோம்” என்றார்.

மேலும் சத்தீஸ்கர் மாநிலம் குறித்து பேசுகையில், ராமன்சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலம் வளர்ச்சியை நோக்கி சென்றது, தற்போது குழப்பமான அரசாங்கம் நிலவுகிறது. மக்கள் ராமன்சிங்கின் 15 ஆண்டுகால வளர்ச்சி நிர்வாகத்தை இப்போது நினைத்து பார்க்கிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க: பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை'- மருத்துவ நிபுணர் குழு தகவல்

ABOUT THE AUTHOR

...view details