சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவருகிறது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதேபோல், இந்தியாவிலும் வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று இந்த மாத 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “கரோனா வைரஸ் பாதிப்பை அனைவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஆளும் அரசு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், அது நாட்டு மக்களைப் பாதுகாக்கக்கூடும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து நேற்று மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...இந்தியாவில் கரோனா பாதிப்பு 562ஆக உயர்வு!