தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்தியா இந்துக்களின் நாடு' - ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு - Country belongs to Hindus says Mohan Bhagwat

பரேலி: இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றும்; இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

Mohan Bhagwat
Mohan Bhagwat

By

Published : Jan 19, 2020, 6:07 PM IST

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், "ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தம் என்கின்றனர். அதாவது இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கும் இந்துக்கள்தான் என்பதே இதற்குப் பொருள்.

அனைவரையும் இந்து என்று கூறுவதன் மூலம் யாருடைய மதத்தையோ மொழியையோ சாதியையோ மாற்ற நாங்கள் விரும்பவில்லை. இந்துத்துவ கொள்கை என்பது ஒரு பரந்துபட்ட சிந்தனை. இங்கு வாழும் அனைவரின் மூதாதையர்கள் இந்துக்கள் என்றே நாங்கள் நம்புகிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் நாட்டின் சிறப்பு. மேலும், நாம் நாட்டின் அரசியலமைப்புக்கு மாற்றாக எதுவும் தேவையில்லை. அதை நாங்கள் மதிக்கிறோம், பின்பற்றுகிறோம். நீங்கள் நமது அரசியலமைப்பை படித்தால், அதிலுள்ள ஒவ்வொரு பக்கத்தாலும் நிச்சயம் உத்வேகம் அடைவீர்கள். நமது தொடக்கத்தைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய இலக்குகள் குறித்தும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் போராடி விடுதலை பெற்ற நாடு. தற்போது தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. அதை நாம் பின்பற்றவேண்டும்" என்றார்.

நேற்று மக்கள்தொகை கட்டுப்படுத்துவது குறித்து தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில், "வளர்ந்து வரும் மக்கள்தொகையும் வளங்களையும் நிர்வகிப்பது நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனாலேயே ஒருவர் எத்தனை குழந்தைகளைப் பெற்றேடுக்கலாம் என்பது குறித்து கொள்கை வகுக்கலாம் என்று கூறினேன். நான் கூறியது ஒன்றும் சட்டம் இல்லை. சட்டம் வகுப்பது என் வேலையும் இல்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க:'பிச்சை எடுக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி' - ஒடிசாவில் ஒரு பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details