சென்னை:அமெரிக்கா, லக்சம்பெர்க், லிதுவேனியா ஆகிய நாடுகளின் ஒன்பது செயற்கைக் கோள்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்திய ராக்கெட், விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 26 மணிநேர கவுன்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.
பி.எஸ்.எல்.வி-சி.49 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளையும், லிதுவேனியா நாட்டின் தொழில் நுட்பம் சார்ந்த செயற்கைக்கோளையும், லக்சும்பெர்க் நாட்டின் நான்கு கடல் சார் செயற்கைக் கோள்களையும், பல்வேறு பயன்பாடுகளுக்காக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் நான்கு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தவுள்ளது. இது நடப்பாண்டில் இந்தியாவிலிருந்து ஏவப்படும் முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இந்த செயற்கைக்கோள் நாள் முழுவதும் ராணுவ கண்காணிப்பை தீவிரப்படுத்த உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.