சிவசேனா கட்சியின் 54ஆவது ஆண்டு நிறைவுதினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொறுப்பாளர்களிடம் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே காணொலிக் காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர், “கரோனா தொற்றை எதிர்த்துப் போராடிவரும் அனைவருக்கும் தேவையான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இது சரியான முறையில் அனைவருக்கும் சென்று சேருகிறதா என்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
'சிவசேனா அலுவலங்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும்' - மகாராஷ்டிரா மாநிலம்
மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் கிளை அலுவலங்கள் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மையங்களாக மாற்றப்படும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
Maharashtra CM video conference meeting
நான் முதலமைச்சரான பிறகு கட்சித் தொண்டர்களுடனான தொடர்பு குறைவாகவே இருந்திருக்கலாம். ஆனால் ஒருபோதும் உங்களை விட்டு விலகிச் சென்றதில்லை. அநீதியை எதிர்த்துப் போராடுவதற்காகவே சிவசேனா பிறந்துள்ளது. கட்சி நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். நகரத்திலுள்ள சிவசேனா கிளை அலுவலகங்கள் அனைத்தும் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் தற்காலிக மையங்களாக மாற்றப்படும்” என்று பேசினார்.