கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இதன் அடுத்தக் கட்டமாக, 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி, மே 23ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து, அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனால், ரயிவ்துறை கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இது குறித்து மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் 22ஆம் தேதிக்கு முன்பு 78.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மார்ச் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மும்பையில் மட்டும் 9 லட்சம் பயணிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்துள்ளனர். அவர்களுக்கு 62.11 கோடி ரூபாய் திருப்பி தரப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.