இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவிவரும் நிலையில், நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இதுவரை 49 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுவருகிறது.
பொது இடங்களில் அதிகமாகக் கூடுவதால் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் பொதுப்போக்குவரத்திற்குக் கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. மேலும், தேவையில்லாமல் பயணம் மேற்கொள்வதைப் பொதுமக்கள் தவிர்க்காவிட்டால், பொதுப் போக்குவரத்தை அரசு முற்றிலும் நிறுத்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.