அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கரோனா தொற்றுநோயால் இறப்பவர்கள் தியாகிகள் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “கோவிட்-19ஆல் இறப்பவர்கள் இஸ்லாத்தில் தியாகிகள் அந்தஸ்தை பெறுகின்றனர். ஆகவே இதுபோன்ற தியாகிகளை அடக்கம் செய்வதற்கு முன்னால் உடலை சுத்தப்படுத்துதலோ (குஸ்ல்) மற்றும் முழு உடலையும் மூடுதலோ (கஃபான்) தேவையில்லை.
தியாகிகளின் உடல்கள் 'நமாஸ்-இ-ஜனாசா' தொழுகைக்குப் பிறகு, சிலரின் முன்னிலையில் உடனடியாக அடக்கம் bசய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். தெலங்கானாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.