கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் உலகிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தவித்துவருகின்றனர். இந்நிலையில், கரோனாவுக்கான மருந்து விலை மலிவாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடையும் விதமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்கான மருந்து குறித்த தயாரிப்புப் பணியைக் கண்காணிக்கும் விதமான உயர்மட்ட கூட்டம் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள பெரிய நாட்டில், விநியோக சங்கிலி மேலாண்மை, யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, தனியார் துறை, சமூகம் ஆகியவற்றின் பங்களிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.