இது குறித்து உலக உணவு திட்டத்தின் ஊட்டச்சத்து இயக்குநர் லாரன் லாண்டிஸ் கூறுகையில், "கரோனாவின் தாக்கம் உலகின் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தள்ளக்கூடும்.
மோசமான ஊட்டச்சத்திலிருந்து ஏற்கனவே பலவீனமான உடல்களில் இந்த நோய்த் தொற்று பேரழிவை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தினசரி வருமானத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். கரோனா ஊரடங்கு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை கடுமையாக பாதித்துள்ளன.
ஏழை நாடுகளில் உள்ள குடும்பங்களுக்கு சத்தான உணவை வழங்குவது மிகவும் கடினம். நாங்கள் இப்போது செயல்படத் தவறினால், எதிர்கால சந்ததியினரில் உயிரிழப்பு, உடல்நலம், உற்பத்தித்திறனை எதிர்கொள்வோம். கரோனாவின் விளைவுகள் பல மாதங்கள், ஆண்டுகள், பல தசாப்தங்களாக உணரப்படுமா என்பதை தீர்மானிக்கும்.