இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள தகவலில், "கடந்த 10 நாள்களில் நாளொன்றுக்கு 10 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டு கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் 5 கோடியை தாண்டிய கோவிட்-19 சோதனை! - இந்தியாவில் 5 கோடி கரோனா சோதனை
டெல்லி: செப்டம்பர் 7ஆம் தேதி வரை நாட்டில் ஐந்து கோடி பேருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா
நாட்டில் நேற்று முன்தினம் வரை (செப். 07) ஐந்து கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரத்து 128 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசி ஒரு கோடி மாதிரிகளின் சோதனை 10 நாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமையன்று (செப். 06) மட்டும் பத்து லட்சத்து 98 ஆயிரத்து 621 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளது.