தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைமை நீதிபதி அமர்வில் மட்டுமே விசாரணை: உச்ச நீதிமன்றம் - கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா

டெல்லி: கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாக உச்ச நீதிமன்றம் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடிவுசெய்துள்ளது.

SC
SC

By

Published : Mar 23, 2020, 9:34 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பை இந்தியாவில் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அரசு அலுவலகங்கள் 50 விழுக்காடு ஊழியர்களை வைத்துக்கொண்டே பணிபுரியும் நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவுசெய்துள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தலைமை நீதிபதி போப்டே, நீதிபதி சந்துரு சந்த் ஆகியோர் இன்று மூன்று முக்கிய வழக்குகளைக் காணொலி காட்சி மூலம் விசாரிப்பார்கள்.

வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் உள்ள மற்றொரு அறையில் காணொலி மூலம் வாதிடுவார்கள். திங்கள்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஒன்றாம் எண் அறை மட்டும் செயல்படும். புதன்கிழமை 2, 8, 14ஆம் எண் அறைகள் செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவையடுத்து காணொலிக் காட்சி விசாரணை முன்னேற்பாடாக ஸ்மார்ட் டிவி, கேமராக்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்டன.

இதையும் படிங்க:கரோனா சந்தேகம்: தனிமையில் ஜெர்மனி அதிபர்

ABOUT THE AUTHOR

...view details