சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தற்போது குறைந்துவருகிறது. இருப்பினும் இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமாகிவருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 415 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணிவரை 17 ஆயிரத்து 493 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட 18 ஆயிரத்து 383 மாதிரிகள் கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை அதில் 415 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சுகாதார ஊழியர்களின் வீரம் நிறைந்த முயற்சிகளுக்கு சல்யூட்' - கேரள முதலமைச்சர்